ஏற்கனவே கவன ஈர்ப்பு தீர்மானம் நோட்டீஸ்; நாளை ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்ஸா!! திமுகவின் திட்டம் என்ன?
இன்றைய தினம் நடப்பாண்டிற்கான இரண்டாவது பட்ஜெட் அமர்வு கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே முதலாவது அமர்வு கூட்டம் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றைய தினத்தில் அதிக அளவு வருங்கால வைப்பு நிதியின் வட்டி குறைப்பு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன தகவல் கிடைத்தது.
அதிலும் குறிப்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக வழங்க முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் கிடைத்தது. அதன்படி இன்று திமுகவினர் கவன ஈர்ப்பு தீர்மானம் நோட்டீசை வழங்கினர். இவ்வாறு உள்ள நிலையில் நீட் தேர்வு விலக்கு குறித்து திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி நீட் தேர்வு விலக்கு தொடர்பாக மக்களவையில் நாளை ஒத்திவைப்பு தீர்மானம் கோரி திமுக சார்பில் டி.ஆர்.பாலு நோட்டிஸ் வழங்குகிறார். மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கோரி சபாநாயகருக்கு திமுக சார்பில் டி.ஆர்.பாலு கடிதம் அனுப்பியுள்ளார். நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் தர கோரி திமுகவினர் ஏற்கனவே கவனஈர்ப்பு தீர்மானம் ஒன்றை வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
