நேற்றைய தினம் தமிழகத்தின் எதிர்க்கட்சியாக உள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக ஒருங்கிணைப்பாளர் தேர்தல் பற்றி அறிவித்திருந்தனர்.
அதன்படி டிசம்பர் 7ஆம் தேதி அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைபெறும் என்று இருவரும் சேர்ந்து கூறியுள்ளனர். இதற்கான வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்யலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தலை தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.
கே.சி பழனிசாமி தொடுத்த வழக்கை மதியம் விசாரிக்கிறார் உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ். ஒற்றை தலைமை வேண்டும் என்று அதிமுக நிறுவனர், உறுப்பினர்கள் நோக்கத்திற்கு எதிராக விதி திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது செயலாளர் அதிகாரத்தை அபகரிக்கும் நோக்கில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாகவும் மனுவில் புகார் அளித்துள்ளார். தேர்தலுக்கு 21 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்ற விதியை அவர்கள் இருவரும் பின்பற்றவில்லை என்று மனுதாரர் கூறியுள்ளார்.