நத்திங் ஃபோன் 2 ரிலீஸ் எதிரொலி.. நத்திங் ஃபோன் 1 வெறும் ரூ.749 மட்டுமா?

நத்திங் போன் 2 வரும் ஜூலை மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நத்திங் போன் 1, பிளிப்கார்ட்டில் ரூபாய் 749 கிடைக்கும் என்ற தகவல் ஸ்மார்ட் போன் பயனாளிகளுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

அனைவரும் எதிர்பார்க்கும் நத்திங் ஃபோன் 2 ஜூலை மாதம் அறிமுகமாகும் என்றும், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 1 சிப்செட் மூலம் இயங்கும் என்றும் கூறப்படுகிறது.. மேலும் நத்திங் ஃபோனை 2 அறிமுகப்படுத்தத் தயாராகி வரும் நிலையில், நத்திங் ஃபோன் 1 பிளிப்கார்ட் விற்பனையில் பெரும் தள்ளுபடியில் கிடைப்பதாகவும், நத்திங் போன் 1 தற்போது ஃபிளிப்கார்ட்டில் ரூ.39,250 தள்ளுபடிக்கு பிறகு வெறும் ரூ.749க்கு கிடைக்கிறது என்றும் கூறப்படுகிறது.

256ஜிபி ஸ்டோரேஜ் உடன் கூடிய நத்திங் ஃபோன் 1 தற்போது ரூ.8,000 தள்ளுபடிக்குப் பிறகு பிளிப்கார்ட்டில் ரூ.31,999க்கு கிடைக்கும். இது தவிர, HDFC வங்கியின் EMI பரிவர்த்தனைகள் மூலம் ரூ.1,250 தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் போனின் விலை ரூ.30,749 என குறையும். அதுமட்டுமின்றி பிளிப்கார்ட் உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு ரூ.30,000 வரை தள்ளுபடி வழங்குவதால் நத்திங் ஃபோனின் 1 விலை ரூ.749 என கிடைக்கிறது.

நத்திங் ஃபோன் 1 6.55 இன்ச் OLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. டிஸ்ப்ளே மேல் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு மற்றும் 120Hz அம்சத்துடன் இயங்கி வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் உள்ளது. மேலும் Qualcomm Snapdragon 778G+ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. SoC ஆனது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

நத்திங் ஃபோன் 1 ஆண்ட்ராய்டு அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4,500 mAh பேட்டரி மூலம் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. கேமராவைப் பொறுத்தவரை, ஸ்மார்ட்போனில் 50எம்பி பிரைமரி சென்சார் மற்றும் 50எம்பி அல்ட்ரா வைட் சென்சார் கொண்ட இரட்டை கேமரா அமைப்பை பின்புறத்தில் கொண்டுள்ளது. நத்திங் ஃபோன் 1ல் செல்பி கேமிரா 16MP அம்சத்தில் உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.