எனக்கு எதுவும் புதிதல்ல! தி.நகருக்கு அதிக பாதிப்பு ஏன்? எப்போது மத்திய அரசிடம் நிவாரணம்?- ஸ்டாலினின் பதில்!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்ததால் சேதங்கள் அதிகம் ஏற்பட்டது. இதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் முதல்வர்  ஸ்டாலின் இது குறித்து சில முக்கிய அறிவிப்புகளை பேட்டியளித்துள்ளார்.

ஸ்டாலின்

அதன்படி மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இவ்வாறு பேட்டியளித்துள்ளார். கொட்டும் மழையிலும் ஆய்வு செய்வது எனக்கு புதிது அல்ல; மேயராக இருந்தபோது இதுபோல் செய்து இருக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் ஸ்மார்ட்சிட்டி குறித்து எதிர்க்கட்சித் தலைவரை பார்த்து வன்மையாக கூறியிருந்தார். அதற்கு நேற்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்து பதிலளித்தனர்.

ஈபிஎஸ்

இந்த நிலையில் ஸ்மார்ட்சிட்டி பணிகளில் லஞ்சம்,ஊழல் நடந்ததால் டி.நகருக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று முதல்வர்  ஸ்டாலின் கூறியுள்ளார். அரைகுறையாக நடந்த ஸ்மார்ட் சிட்டி பணிகளால் தான் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும்  ஸ்டாலின் கூறியுள்ளார்.

பத்தாண்டுகளாக அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யாததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் தேங்கியுள்ள நீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடக்கிறது என்றும் கூறியுள்ளார்.

ஸ்டாலின்

இரண்டு நாள் மழை இருக்கும் என்கிறார்கள்;அது முடிந்த பிறகு மத்திய அரசிடம் நிவாரணம் கேட்பது பற்றி முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர்  ஸ்டாலின் கூறியுள்ளார்.

நோய்களை தடுக்க மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன என்றும் கூறியுள்ளார். சென்னையில் வடிகால் பணிகள் முடிந்த பிறகு முழுமையாக செய்து முடிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். முழுமையாக பணிகள் செய்து முடித்து சேதாரம் இல்லாத சென்னையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment