டிசம்பர் 30ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள துப்பாக்கி பயிற்சி மையத்தில் எதிர்பாராதவிதமாக துப்பாக்கி குண்டு வீட்டில் பாய்ந்து சிறுவன் படுகாயம் அடைந்தான். அதன்பின்னர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
இதனால் பெற்றோர்கள் உறவினர்கள் என பலரும் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் டிஜிபி துப்பாக்கி சூடு பயிற்சி பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் உள்ள துப்பாக்கி பயிற்சி மையத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு குழு அமைத்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டையில் துப்பாக்கி சுடும் பயிற்சி போது சிறுவன் மீது குண்டு பாய்ந்து பலியானதை தொடரந்து டிஜிபி சைலேந்திரபாபு தடை உத்தரவை பிறப்பித்தார். டிசம்பர் 30-ஆம் தேதி சிஐஎஸ்எப் மத்திய பாதுகாப்பு படையின் துப்பாக்கி பயிற்சியின் போது சிறுவன் புகழேந்தி மீது குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்தான்.
துப்பாக்கி பயிற்சி மையங்களில் இருந்து துப்பாக்கி கொண்டு வெளியே செல்லாதவாறு சிறப்பு கட்டமைப்பு இருப்பதை உறுதி செய்க என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.