2015 போல் ஒன்னும் இல்ல; ஐகோர்ட்டுக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்! கடந்த ஆட்சி மீது நடவடிக்கை!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மூன்று நாட்களாக வெள்ளம் பாதிப்பு பகுதிகளுக்கு நேரில் சென்று களப்பணி ஆற்றி வந்தார். மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்களையும், நிவாரணப் பொருட்களையும் வழங்கி வந்தார்.இந்த நிலையில் தற்போது அவர் செய்தியாளர்களிடம் சில முக்கிய தகவல்கள் குறித்து பேட்டியளித்துள்ளார்.

ஸ்டாலின்

அதன்படி வரும் இரண்டு நாட்களில் பெய்யக்கூடிய மழையை எதிர் கொள்ளத் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். இருபத்திநான்கு மணிநேரமும் துரிதமாக செயல்பட்டதால் 2015 வெள்ளப்பெருக்கு போல் நடக்காமல் தவிர்க்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இன்றைய தினம் காலையில் ஹை கோர்ட் நீதிபதிகள் சென்னை மாநகராட்சியை பார்த்து 2015 போல் தற்போது சென்னை வெள்ளம் பாதிப்பு உள்ளது என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  இவ்வாறு பேட்டி அளித்துள்ளார்.

அது மட்டுமில்லாமல் கடந்த ஆட்சியில் 5000 கோடி ஒதுக்கப்பட்டது என்ன நடந்ததென்று தெரியவில்லை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். கடந்த ஆட்சியில் நடந்த பணிகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் பேட்டியளித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment