விடியல் அரசு இல்லை விடியா அரசு- தமிழக அரசு மீது ஹெச்.ராஜா கடும் கண்டனம்

தமிழக பாரதிய ஜனதாவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இவர் ஏதாவது அதிரடியாக  பேசி சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம்.

இவர் ஆளும் திமுக அரசை எப்போதுமே கடுமையாக எதிர்த்து வருபவர் ஆவார்.

இன்று கரூரில் நடந்த கூட்டத்தில் பேசிய ஹெச்.ராஜா

அறநிலையத்துறை என் மீது வழக்குகள் தொடுக்கிறது. அவர்கள் அனைவருமே ஊழல்வாதிகள்தான் யாராவது சரியான யோக்கியனாக இருந்தால் சத்தியம் செய்யுங்கள் பார்க்கலாம் என கூறினார்

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  நான் கூறும்  குற்றச்சாட்டுகளை பார்த்து சூரியனை பார்த்து நாய் குரைக்கிறது என்கிறார்.

நான் நாய்தான். நாய் யாரை பார்த்து குரைக்கும்? திருடனை பார்த்துதான் குரைக்கும் என்று அதிரடியாக கூறியுள்ளார்.

மேலும் தமிழக அரசு விடியல் அரசு என்று சொல்கிறது ஆனால் அது எதற்கும் விடியாத அரசு என்று என்று காட்டமாக திமுக அரசை விமர்சித்தார் ஹெச்.ராஜா.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment