Connect with us

I don’t care..! ஆன்மீகத்துக்கு எதிரி அல்ல; அதை வைத்து அரசியல் செய்பவர்களுக்கே!!

stalin1 1611986058

தமிழகம்

I don’t care..! ஆன்மீகத்துக்கு எதிரி அல்ல; அதை வைத்து அரசியல் செய்பவர்களுக்கே!!

ஒவ்வொரு நாளும் நம் தமிழக முதல்வர் ஸ்டாலின் மாவட்ட வாரியாக பல்வேறு விதமான நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அந்த படி இன்றைய தினம் திருவண்ணாமலையில் மாவட்டத்தில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

அதன்படி புதிய பேருந்து நிலையம் உட்பட மொத்தம் 246 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின். 71 கோடி ரூபாய் மதிப்பிலான 91 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.

திருவண்ணாமலை மாவட்டம் வரலாற்றுக்கும் ஆன்மீகத்துக்கும் பெயர் பெற்ற மாவட்டம் என்றும் கூறினார். திருவண்ணாமலை மாவட்டத்தை உருவாக்கி அறிவித்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்தவர் கலைஞர் கருணாநிதி தான் என்றும் கூறினார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலை மத்திய தொல்லில் துறை எடுத்துக் கொள்ள முயன்ற போது அதை பாதுகாத்தது திமுக ஆட்சி. தமிழ்நாட்டிலேயே நீர் மேலாண்மை திட்டங்களை மிகச் சிறப்பாக செயல்படுத்திய மாவட்டம் என்ற பெருமையை திருவண்ணாமலை மாவட்டம் பெற்றிருக்கிறது என்றும் கூறினார்.

மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் ஸ்டாலின் வழங்கினார் .அப்போது மேடையில் பேசிய அவர் ஆன்மீகத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல ஆன்மீகத்தின் பேரில் மனிதர்களை மதத்தால், ஜாதியால் பிளவு படுத்துகிறவர்களுக்கு தான் எதிரிகள் என்று கூறியுள்ளார். பொய்யிலும் பிரட்டிலும் மலிவான விளம்பரம் தேடக்கூடிய வீரர்களை பற்றி ஐ டோன்ட் கேர் என்றும் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top