நடிகை கஸ்தூரி அவ்வப்போது ஏதாவது பரபரப்பு டுவிட்டை வெளியிடுவது வழக்கம். ஏதாவது வம்பு வழக்கான விசயத்தையும் இவர் வெளியிடுவதில்லை.
நியாயமான விமர்சகர் என இவரை சொல்லலாம். அரசியல்வாதிகள் நடிகர்களின் ரசிகர்கள் என யாரையும் இவர் விட்டு வைப்பதில்லை யார் என்ன தப்பு செய்தாலும் அதை திறம்பட விமர்சிப்பவர்.
தற்போது இரண்டு நாட்களாக சென்னையில் பெய்து வரும் மழையில் வெள்ளம் தேங்கியுள்ளதற்கு கஸ்தூரி வெளியிட்டுள்ள நக்கல் டுவிட் இதோ.
சிங்கார சென்னை சிங்கார சென்னைன்னு சொன்னீங்க, sinkஆகுற சென்னையா ஆயிருச்சே. ஒரே நாள் மழையில ஊரே மூழ்கிருச்சே.அய்யா மந்திரிமாரே, அதிகாரிங்களே , கொஞ்சம் மனசாட்சியோட நியாயமா வேலை செஞ்சு ஊரையும் உங்களுக்கு வோட்டு போட்டவங்களையும் கரை சேருங்க அய்யாமாரே ! என இவர் கூறியுள்ளார்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.