கடந்த சில நாட்களாகவே பாஜகவில் குழப்பமான சூழல் உருவாகி வருகிறது. அந்த வகையில் பாஜக நிர்வாகி பேசிய ஆடியோ சோசியல் மீடியாக்களில் வெளியான நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதே சமயம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் ஈடுபடுவதால் 6 மாத காலத்துக்கு பாஜகவில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
பெண் காவலரின் பாலியல் புகாரில் திடீர் திருப்பம்!!
இந்நிலையில் தமிழக பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் விலக முடிவு எடுத்துள்ளதாக தனது டுவிட்டரில் அதிகார்வப்பூர்வமான தகவலை வெளியிட்டு உள்ளார். இதனிடையே பாஜக தலைவரான அண்ணாமலை ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்து உள்ளார்.
அதன் ஒரு பகுதியாக பெண்களுக்கான சம உரிமை மற்றும் மரியாதை ஆகியவைக்கு வாய்ப்பளிக்காததால் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக காயத்ரி ரகுராம் தெரிவித்து உள்ளார்.
போலி சாதி சான்றிதழ்: விதிகளை வகுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
மேலும், அவருக்கு எதிராக டியோ, ஆடியோ அனைத்தையும் வெளியிடும்படி நான் போலீசில் புகார் அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.