தமிழ்நாட்டில் மட்டும் இல்ல டெல்லியிலும் இன்றுதான் பள்ளி திறப்பு! பல சுவாரஸ்யமான அறிவிப்புகள்!!

தமிழகத்தில் இன்றைய தினம் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன.  மாணவர்கள் மிகவும் துள்ளிக்குதித்து உற்சாகத்தோடு பள்ளிக்கு சென்றனர். உற்சாகமாக பள்ளிகளை தேடி வந்த மாணவர்களை ஆசிரியர்கள் மிகுந்த அன்போடு வரவேற்றனர். பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் மட்டும் இல்லாமல் தலைநகர் டெல்லியிலும் இன்றைய தினம் பள்ளி திறக்கப்பட்டுள்ளது. அதன்படி பல நீண்ட மாதங்களுக்குப் பிறகு தலைநகர் டெல்லியில் இன்றைய தினம் அனைத்து பள்ளிகள் திறக்கப்பட்டது.

ஏனென்றால் டெல்லி மாநிலத்தில் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் அங்கு கொரோனா  நோயால் சிகிச்சை பலனின்றி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. இதனால் அம்மாநில முதல்வர் காலவரையறையின்றி அனைத்து பள்ளிகளை மூட உத்தரவிட்டு இருந்தார்.

தற்போது டெல்லியில் கொரோனா   கட்டுப்பாட்டிற்குள் வந்த நிலையில் பள்ளிகளை திறக்க அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.

தலைநகர் டெல்லியில் கொரோனா  குறைந்து வந்த நிலையில் அங்குள்ள தியேட்டர்களில் 100% இருக்கை உடன் திறக்கப்பட்டுள்ளன. புதிய தளர்வு விதிப்படி திருமணம் மற்றும் இறுதி சடங்கில் பங்கேற்க உச்ச வரம்பாக 200 பேர் கலந்து கொள்ளலாம் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment