Connect with us

பெட்ரோல், டீசல் மட்டுமின்றி இயற்கையான எரிவாயு விலையும் உயர்வு!!!

பெட்ரோல்

செய்திகள்

பெட்ரோல், டீசல் மட்டுமின்றி இயற்கையான எரிவாயு விலையும் உயர்வு!!!

பெட்ரோல், டீசல் மட்டுமின்றி இயற்கையான எரிவாயு விலையும் உயர்வு!!!

தற்போது நாடெங்கும் பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு வருகிறது. நம் தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல், டீசலின் விலை சற்று அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை மட்டுமின்றி வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயு விலையும் உயர்ந்து உள்ளதாக காணப்படுகிறது.

அதன்படி டெல்லியில் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் இயற்கையான எரிவாயு விலை கிலோவிற்கு ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு 59 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் டெல்லியில் வாகனங்களுக்கும், வீடுகளுக்கு இயற்கையான எரிவாயு வழங்குகிறது. இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் நிறுவனம் தற்போது எரிவாயு விலையை உயர்த்தியுள்ளது.

அதேவேளையில் வீடுகளுக்கு குழாய் மூலம் வழங்கப்படும் எரிவாயு விலை ஒரு யூனிட் ரூ 36.61 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் டெல்லி மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். டெல்லியில் தற்போது பேருந்துகளுக்கு தனி பாதை அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top