சென்னையில் மட்டும் இல்ல கோயம்புத்தூர், மதுரையிலும் மெட்ரோ ரயில்?

நம் இந்தியாவில் அனைத்து இடங்களிலும் தற்போது ரயில் சேவைகள் அதிகரித்துள்ளது. அதுவும் குறிப்பாக இந்தியாவில் மெட்ரோ ரயில் சேவைகள் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மட்டும் தான் மெட்ரோ ரயில் சேவை உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கோயம்புத்தூரில் மெட்ரோ ரயிலுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாராக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் அளித்தார்.

இதனால் தமிழகத்தில் சென்னை,கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட மூன்று மாகாணங்களில் மெட்ரோ ரயில் திட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் மிகுந்த பயன் அடைவார்கள் என்றும் நேரம் குறைவாகவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment