பருவமழையால் மனிதர் மட்டுமல்ல கால்நடைகளும் இறக்கக்கூடாது! முதல்வரின் கண்டிப்பான உத்தரவு;

தற்போது தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஏனென்றால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியது. இந்த நிலையில் இந்த பருவமழை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.

அதன்படி இந்த பருவமழையால் மனிதனுக்கு மட்டுமல்ல கால்நடைகள் இழப்பு ஏற்படக் கூடாது என முதல்வர் அறிவித்துள்ளார் என்று அமைச்சர் கூறியுள்ளார். இதனை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

டிசம்பர் இறுதி வரை பருவ மழையை எதிர் கொள்ள தாங்கள் தயாராக இருக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார். வானிலை அறிக்கை அடிப்படையில் கடலுக்கு செல்வது குறித்து மீனவர்களுக்கு அறிவித்து வருகிறோம் என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார்.

ஒரு லட்சம் பேர் மீட்பு பணியில் ஈடுபடுகின்றனர் என்றும் கூறினார், மீட்பு பணிக்காக தன்னார்வலர்கள் ஒரு லட்சம் பேரை தயார்படுத்தி வைத்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

பருவமழை மீட்புப் பணியில் கடலோர காவல்படை ஈடுபடுத்தப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார். கடந்த முறை மழையினால் அதிக பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் கூடுதல் கண்காணிப்பு வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார்.

பொது மக்கள் தங்குவதற்காக 5106 முகாம்கள் தயாராக உள்ளன என்றும் தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment