Connect with us

மொத்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒரு சதவீதம் கூட இல்லையா? இதெல்லாம் அநீதி!-பாமக நிறுவனர்;

budget22 10 16433727663x2 1

News

மொத்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒரு சதவீதம் கூட இல்லையா? இதெல்லாம் அநீதி!-பாமக நிறுவனர்;

மொத்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒரு சதவீதம் கூட இல்லையா? இதெல்லாம் அநீதி!-பாமக நிறுவனர்;

பிப்ரவரி 1ஆம் தேதி இந்தியாவில் 2022 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யபட்டது. ரயில்வே துறைக்கு பட்ஜெட்டில் ரூபாய் 1.40 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கருத்து கூறியுள்ளார்.

அதன்படி ரயில் திட்டத்தில் 0.7 சதவீதம் நிதி ஒதுக்கீடு அநீதி என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டின் புதிய ரயில் திட்டங்களுக்கு மொத்த மதிப்பில் சுமார் 0.7 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்கியது அநீதி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

தமிழ்நாட்டின்  வளர்ச்சித் திட்டங்களை தொடர்ந்து புறக்கணிப்பது அநீதி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ 1.40 லட்சம் கோடி ஒதுக்கி ஏற்பட்டுள்ளது என்று ராமதாஸ் கூறினார்.

தமிழ்நாட்டின் ரயில் வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூபாய் 7.144 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ராமதாஸ் கூறினார். தமிழ்நாட்டின் புதிய ரயில்வே திட்டங்களுக்கு மொத்த மதிப்பீட்டில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தமிழகத்திற்கு செய்யும் அநீதி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

ரயில் வளர்ச்சித் திட்டங்களுக்கு கடந்த 15 ஆண்டுகளில் ரூ575 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்ட 8 ரயில் திட்டப் பணிகளுக்கு பாதை தலா ரூபாய் 1000 மட்டுமே நிதி என்பது அநீதி என்று ராமதாஸ் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top