இந்த ஆண்டு நிறைவு பெற இன்னும் சில நாட்களே உள்ளது. இதனால் மக்கள் புத்தாண்டை நோக்கி எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதோடு வருகின்ற வருடம் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிக அளவில் உள்ளன.
ஒவ்வொரு வருடமும் புத்தாண்டன்று தமிழகத்தில் உள்ள பொது இடங்களில் மக்கள் கூடி கொண்டாடி மகிழ்வர். அவற்றில் குறிப்பாக கடற்கரை பகுதிகளில் மக்கள் கூடி புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி கொண்டாட்டத்தில் ஈடுபடுவர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு கடற்கரையில் கூட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி 2022ஆம் ஆண்டு புத்தாண்டையொட்டி மக்கள் அதிகளவில் போடுவதை தடுக்க வரும் டிசம்பர் 31ம் தேதியும், புத்தாண்டு தினமான ஜனவரி 1ஆம் தேதியும் கடற்கரைகளில் கூட மக்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது.இதனால் பொதுமக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.