‘தாலிக்கு தங்கம் திட்டம்’ ரத்து இல்லை!! ஸ்டாலின் அப்படி பண்ண மாட்டார்!!

கடந்த இரண்டு நாட்களாக நம் தமிழகத்தின் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நேற்றையதினம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

அதற்கு முந்தைய தினத்தில் தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தாலிக்கு தங்கம் திட்டம் பற்றி ஏதேனும் அறிவிப்புகள் இருக்குமா? என்று தான்.

ஆனால் தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக எதிர் கட்சியினர் கூறி வந்தனர். இதனை முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

அதன்படி தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டதாக பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். மக்களுக்கு பயன்தரும் திட்டங்களை ஒருபோதும் முதலமைச்சர் ஸ்டாலின் புறக்கணிக்க மாட்டார் என்றும் சேகர்பாபு கூறினார்.

இதனால் நிச்சயமாக தாலிக்கு தங்கம் திட்டம் இருக்கும் என்பது தெரிகிறது. மேலும் வருகின்ற நாட்களில் தாலிக்கு தங்கம் திட்டம் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment