Connect with us

சோகத்தில் மூழ்கும் இன்ஜினியரிங்! “72 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேர விரும்பவில்லை!!”

இன்ஜினியரிங் கலந்தாய்வு

கல்வி

சோகத்தில் மூழ்கும் இன்ஜினியரிங்! “72 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேர விரும்பவில்லை!!”

சோகத்தில் மூழ்கும் இன்ஜினியரிங்! “72 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேர விரும்பவில்லை!!”

முன்னொரு காலத்தில் நாம் தமிழகத்தில் மாணவர்கள் மத்தியில் இன்ஜினியரிங் மோகம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் காலம் செல்ல செல்ல இன்ஜினியரிங் படிப்பு மீது மாணவர்களுக்கு அதிருப்தி அதிகமாக காணப்பட்டது.இன்ஜினியரிங்

இதன் விளைவாக தமிழகத்தில் உள்ள பல இன்ஜினியரிங் கல்லூரிகள் தொடர்ச்சியாக மூடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது பொறியியல் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த இரு வாரங்களாக ஆன்லைனில் நடைபெற்றது.

கலந்தாய்வு சிறப்பு மற்றும் பொதுப்பிரிவு மாணவர்கள் கலந்தாய்வு நடந்து முடிந்த நிலையில் தற்போது பல அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி பொறியியல் மாணவர் சேர்க்கையில் 72 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேர விருப்பம் தெரிவிக்கவில்லை என்று தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் 31 கல்லூரிகளில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாக மாணவர் சேர்க்கை நடந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் 5 % கீழ் 248 கல்லூரிகளிலும், 10% கீழ் 306 கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர விருப்பம் இருப்பதாக காணப்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழகம்மேலும் 25% கீழாக 342 கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் 50% கூடுதலாக 61 கல்லூரிகளில் மட்டுமே இடங்கள் நிறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் 90 சதவீதம் அதிகமாக 15 கல்லூரிகளில் மட்டும் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மொத்தமுள்ள 1.51லட்சம் இடங்கள் உள்ள நிலையில் 31 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளது தெரியவந்துள்ளது.

இதனால் இந்த ஆண்டு மாணவர்கள் இன்ஜினியரிங் மீது தங்களது அதிருப்தியை வெளிக்காட்டி உள்ளனர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in கல்வி

To Top