2 நாட்களாக சிங்க நடை போடும் தமிழ்நாடு! 30 மாவட்டங்களில் ஒரு உயிரிழப்பு கூட நிகழவில்லை!!

தொடர்ந்து நம் தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் மெல்ல மெல்ல வர தொடங்கிவிட்டது. ஏனென்றால் தொடர்ந்து மூன்று நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 700 க்கு கீழாக காணப்படுகிறது.

கொரோனா

அதிகபட்சமாக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மட்டும் 120 பேருக்கு கொரோனா  பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடுத்த படியாக கோவை மாநகரத்தில் 108 பேருக்கு கொரோனா  பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 174 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரே நாளில் 719 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் கொரோனா  உயிரிழப்பு ஒன்று நிகழவே இல்லை என்று அறியப்படுகிறது.

அதன்படி செங்கல்பட்டு, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சியில் கொரோனா உயிரிழப்பு நிகழவில்லை. அரியலூர், காஞ்சிபுரம், கரூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா  உயிரிழப்பு நிகழவில்லை.

நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலத்தில் கொரோனா உயிரிழப்பு இன்று நிகழவில்லை. சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, தென்காசி, திருப்பத்தூர், திருவண்ணாமலையிலும் இன்று கொரோனா நிகழவில்லை. திருவாரூர், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் இன்று யாரும் கொரோனாவினால் உயிரிழக்கவில்லை

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment