Connect with us

நார்வே: 485 அடி மரப்பாலம் இடிந்து விழுந்து விபத்து!!

Capture 22

செய்திகள்

நார்வே: 485 அடி மரப்பாலம் இடிந்து விழுந்து விபத்து!!

நார்வே நாட்டில் ஆற்றின் மரப்பாலம் இடிந்து விழுந்ததில் லாரியுடன் சிக்கிய ஓட்டுனர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு திறக்கப்பட்ட 485 அடி நீளமுள்ள மர பாலத்தில் அதிக எடையுடன் லாரி மற்றும் கார் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாரம் தாங்காத மரப்பாலம் திடீரென எதிர்பாராத விதமாக உடைந்தது.

இந்த விபத்தில் லாரி மற்றும் கார் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே வாகனங்கள் ஆற்றில் கவிழ வில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக கார் ஓட்டுனர் எளிதாக மீட்கப்பட்டதாக தெரிகிறது.

அதோடு லாரியில் தவித்த ஓட்டுனரை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்பு குழுவினர் மீட்டனர். மேலும், 485 அடி மரப்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top