Connect with us

சோகத்தில் வட தமிழகம்! மகிழ்ச்சியில் தென் தமிழகம்!

News

சோகத்தில் வட தமிழகம்! மகிழ்ச்சியில் தென் தமிழகம்!

e96d050939d43131d755286821f5f75c-1

கோடைகாலம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது மே மாதம் மட்டுமே. ஆனால் தற்போது மார்ச்சு மாதம் நடக்கின்ற நிலையில் வெயிலின் தாக்கம் ஆனது பலபகுதிகளில் அதிகமாக உள்ளது. ஒரு சில பகுதிகளில் தலைகாட்ட முடியாத அளவிற்கு வெயில் தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையமானது மகிழ்ச்சி மற்றும் சோகம் கலந்த செய்தியைக் கூறியது.

8f8bf21997cded72082a94a60faea8cf

 தென் மாவட்டங்களில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியாகவும், வடதமிழகத்தில் இருப்பவர்களுக்கு வருத்தத்தை அளிப்பதாக உள்ளது. தமிழகத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில்  இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறியுள்ளது. ஏனைய தென் மாவட்டங்களில் லேசான மழை உள்ளதாகவும் கூறியுள்ளது.

 ஆனால் வட தமிழகத்தில்  வறண்ட வானிலையே காணப்படும் எனவும், குறிப்பாக புதுச்சேரி காரைக்கால் போன்ற பகுதிகளிலும் வறண்ட வானிலையே இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top