சிறுமியை பாலியல் வன்கொடுமை, கொலை செய்த வட மாநில குற்றவாளிக்கு சாகும்வரை சிறை

ஸ்ரீவில்லிபுத்தூர் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று வட மாநிலத்தை சேர்ந்த குற்றவாளிக்கு ஆயுள் காலம் முழுவதும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு….

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கொங்கலாபுரத்தை சேர்ந்த சுந்தரம்-பத்மா தம்பதியினரின் 8 வயது மகள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி சிறுமி பள்ளிக்கு சென்றுவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்ற நிலையில் மறுநாள் காட்டுபகுதியில் சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து சிவகாசி நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து நடத்திய விசாரணையில் நூல் பை தயாரிக்கும் கம்பெனியில் பணியாற்றிய 21 வயதான மஜம் அலி என்ற அஸ்ஸாம் மாநில தொழிலாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது.

தொடர்ந்து கைது செய்யப்பட்ட மஜம் அலி மீது கொலை வழக்கு, ஆள் கடத்தல், போக்சோ, உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று முடிவடைந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு குறித்த தீர்ப்பிற்கு முன்பு நீதிபதி அரசு தரப்பு மற்றும் குற்றம்சாட்டப்பட்டவரின் தரப்பு வழக்கறிஞரிடம் தண்டனை குறித்து கருத்து அரசு மற்றும் குற்றம் சாட்டப்பட்ட நபரின் வழக்கறிஞர்களிடம் சுமார் 5 மணி நேரம் எடுத்துரைத்தார்.

மேலும் குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் உனக்கு 20 வருடம் சிறை தண்டனை வழங்கலாமா ஆயுள் முழுவதும் நீ சிறையில் இருக்க தண்டனை வழங்கலாமா அல்லது அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை வழங்கலாமா என கேட்டார் அதற்கு குற்றம் சாட்டப்பட்ட நபர் என்னை மன்னித்து விட்டு விடுங்கள் என நீதிபதியிடம் கூறினார் அதற்கு நீதிபதி பதிலளிக்கியில் நீ செய்த குற்றம் அடிப்படை சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது ஆகையால் நீ குற்றவாளி தான் என கூறினார்

தொடர்ந்து தீர்ப்பை வாசித்த நீதிபதி 12 வயது கீழ் உள்ள சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்தது, கொடுங்காயம் ஏற்படுத்தியது, கொலை செய்தது உள்ளிட்ட குற்றம் நிரூபனமானதாக தெரிவித்தார்.

இது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல் என்றும் இது போன்ற குற்றங்களை பொதுமக்கள் ஏற்கவில்லை எனவும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் தெரிவித்து வட மாநிலத்தை குற்றவாளிக்கு ஆயுள் காலம் முழுவதும் சிறை தண்டனையும் 25 ஆயிரம் விதித்து திர்ப்பு வழங்கினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment