29ஆம் தேதி தொடங்கும் வடகிழக்கு பருவமழை! எந்தெந்த மாவட்டம் தெரியுமா?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29 ஆம் தேதி ஒட்டி துவங்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக அக்டோபர் 29 ஆம் தேதி முதல் நவம்பர் 4ம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

விலை உயர்ந்த மருந்து ஏழைகளுக்கு கிடைப்பதில்லை- ஐகோர்ட் வேதனை!

இதனை தொடர்ந்து வருகின்ற 29- ஆம் தேதி கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழைபெய்யும் என கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு: 47 குண்டுகள் துளைக்கப்பட்டது கண்டுபிடிப்பு!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment