Connect with us

சனிக்கிழமையோடு டாட்டா காட்டும் வடகிழக்கு பருவமழை! அடுத்த 5 நாட்களுக்கு வெயில் கொளுத்த போகுது!!

weather 1

செய்திகள்

சனிக்கிழமையோடு டாட்டா காட்டும் வடகிழக்கு பருவமழை! அடுத்த 5 நாட்களுக்கு வெயில் கொளுத்த போகுது!!

சனிக்கிழமையோடு டாட்டா காட்டும் வடகிழக்கு பருவமழை! அடுத்த 5 நாட்களுக்கு வெயில் கொளுத்த போகுது!!

2021 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாத இறுதி வாரத்தில் தொடங்கியது. இதன் விளைவாக நவம்பர் மாதம் முழுவதும் தமிழ்நாடு புதுச்சேரி பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது.

அதன் பின்னர் டிசம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் படிப்படியாக குறைந்தது. இந்த நிலையில் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிறந்ததற்கு பின்பு வடகிழக்கு பருவமழையின் தாக்கம் காணாமலே போய்விட்டது போல் காணப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வருகின்ற சனிக்கிழமை வடகிழக்கு பருவமழை விடைபெறுகிறது என்று கூறியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் வருகின்ற சனிக்கிழமையுடன் வடகிழக்கு பருவமழை முடிவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

புதுச்சேரி, காரைக்கால், ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் இருந்து வடகிழக்கு பருவமழை விலக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்னிந்திய பகுதிகளில் இருந்து வட கிழக்கு பருவ மழை வருவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக விளக்கம் அளித்துள்ளது.

அதேவேளையில் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top