பள்ளி மாணவர்களுக்கு மரண தண்டனை.. நாடகம் பார்த்தது ஒரு தப்பா?

தொலைக்காட்சியில் நாடகம் பார்த்த இரண்டு பள்ளி மாணவர்களுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகிலேயே வடகொரியா மட்டும்தான் ஒரு மர்மமான தேசம் என்றும் அந்நாட்டு மக்களும் அந்நாட்டு அரசு என்ன செய்கிறது என்பது வெளி உலகிற்கு தெரியாமல் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வட கொரியாஎந்தவித சமூக ஊடகங்களும் வடகொரியாவில் இல்லை என்பதால் அந்நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள்? எப்படி கஷ்டப் படுகிறார்கள்? என்பது கூட அண்டை நாடான தென் கொரியாவுக்கு கூட தெரியாத நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தென் கொரியா மற்றும் வட கொரியா ஆகிய இரண்டு நாடுகளும் பல ஆண்டுகளாக எதிரி நாடுகளாக இருந்து வரும் நிலையில் தென்கொரிய நாடகத்தை பார்த்ததற்காக வட கொரியாவை சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ளது.

16 மற்றும் 17 வயது பள்ளி மாணவர்கள் தென் கொரியாவின் நாடகங்களை வீட்டில் தொலைக்காட்சியில் கதவை மூடிக்கொண்டு பார்த்ததாகவும் அதை கண்டுபிடித்த வட கொரிய அரசு அதிகாரிகள் அந்த 2 மாணவர்களையும் மக்கள் முன்னிலையிலேயே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த மரண தண்டனை கடந்த அக்டோபர் மாதமே நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போது தான் வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது என்பது கூடுதல் அதிர்ச்சி ஆகும் .

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.