தமிழர்களை வட மாநிலத்தவர்கள் அடித்து துரத்தவில்லை!!! திருப்பூர் காவல் ஆணையரகம் விளக்கம்;

கடந்த இரண்டு நாட்களாக பெரும் பரபரப்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. ஏனென்றால் தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவு வட மாநில மக்கள் காணப்படுகின்றனர். இதனால் அங்கு தமிழர்களுக்கு வேலை இல்லை என்பது போல் மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டு வந்துள்ள நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு வடமாநிலத்தார்கள் தமிழர்களை அடித்து துரத்துவது போல் செய்திகள் பரவியது.

இது தொடர்பாக திருப்பூர் காவல் ஆணையர் தவறாக தகவல் பரவப்படுகிறது என்று கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் பரவும் சம்பவம் தற்செயலாக இரண்டு நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையே என்றும் கூறியுள்ளார்.

14ஆம் தேதி ரியா என்ற நிறுவனத்தில் பணிபுரிபவர் அருகில் உள்ள கடைக்கு சென்று தேநீர் அருந்தி உள்ளார். கடையில் அமர்ந்திருந்த இரண்டு நபர்களுக்கு இடையே புகைபிடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளதாக காவல் ஆணையர் கூறினார்.

நிறுவனத்தில் பணிபுரிபவரை இரண்டு பேரும் தாக்கம் ஏற்பட்டதால் பதிலுக்கு பணி புரியும் நபர் தனது நண்பர்களை அழைத்து வந்துள்ளார். இருதரப்பு வாக்குவாதம் ஏற்பட்ட பின்னர் கலைந்து சென்றுவிட்டனர், என்றும் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக யாரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்று திருப்பூர் காவல் ஆணையரகம் விளக்கம் அளித்துள்ளது. தொழில் போட்டியோ, முன் விரோதம் காரணமாகவோ ஏற்பட்ட பிரச்சனை இது இல்லை என்றும் தற்செயலாக ஏற்பட்ட பிரச்சனையை என்றும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழர்களை வட இந்தியர்கள் விரட்டுவதாக வலைத்தளங்களில் பரவும் செய்தியில் உண்மையில்லை என்றும் கூறியுள்ளது. சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரணை செய்து சம்ப த்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். 14ஆம் தேதி நடந்த சம்பவத்தை 26 ஆம் தேதி நடந்ததாக சமூக வலைத்தளங்களில் தவறாக பகிரப்பட்டு வருகிறது என்றும் விளக்கம் அளித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.