நாளை முதல் வடகிழக்கு பருவமழை: வானிலை எச்சரிக்கை அறிவிப்பு

கடந்த ஜூன் மாதம் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக நல்ல மழை பெய்தது என்பதும் சென்னை உள்பட தமிழகத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் இன்று முதல் எந்தெந்த பகுதியில் மழை பெய்யும் என்பதை தற்போது பார்ப்போம்

வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்க உள்ளதால் இன்று சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுவை, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும்.

மேலும் அக்டோபர் 27-ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள் கோவை, சேலம், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் . சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் அடுத்த நான்கு நாட்களுக்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment