இன்று முதல் தொடங்கியது வடகிழக்கு பருவமழை: 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 26-ஆம் தேதி முதல் தொடங்கும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் சற்று முன்னர் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் அவர்கள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக அறிவித்து உள்ளார்

இதனையடுத்து இன்று ஏழு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வடகிழக்கு பருவமழை காரணமாக தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்பட 7 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் தென் மேற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும் என்றும் அதன் காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment