வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

கனமழை

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவமழை பெய்தது என்பதும் இந்த மழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியானது. அதன்படி சற்று முன்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 26ஆம் தேதி முதல் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை போலவே வடகிழக்கு பருவமழையாலும் தமிழகத்தில் இந்த ஆண்டு அதிகமாக பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதங்களில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என்பதை அடுத்து இந்த ஆண்டும் அதே போன்ற மழையை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print