Connect with us

எச்சரிக்கை.!! அதிமுக தொண்டர்கள் யாரும் ஜாதி, மதங்களுக்கு ஆளாகாதீர்கள்-செல்லூர் ராஜூ;

sellur ra

தமிழகம்

எச்சரிக்கை.!! அதிமுக தொண்டர்கள் யாரும் ஜாதி, மதங்களுக்கு ஆளாகாதீர்கள்-செல்லூர் ராஜூ;

தற்போது அதிமுக இடையே பெரும் குழப்பம் நிலவுகிறது. அதிலும் குறிப்பாக ஒற்றை தலைமை என்ற பேச்சு வார்த்தை அதிமுகவில் அதிகளவு காணப்படுகிறது. இதனால் அதிமுகவின் இரு பெரும் தலைவர்களான எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே முரண்பாடான கருத்துக்கள் உருவாகிறது.

மேலும்  இருவரும் இரு அணிகளாக பிரிந்து உள்ளதாக காணப்படுகிறது. இது மத்தியில் அடுத்தடுத்து அதிமுக தரப்பிலிருந்து முக்கியமான தகவல்கள் செய்தியாளர்கள் மத்தியில் பேட்டி அளிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்போது எம்எல்ஏ செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்கிறார். அவர் அதிமுக தொண்டர்கள் யாரும் ஜாதி மதங்களுக்கு ஆளாகாதீர்கள் என்று கூறியுள்ளார். அதிமுக எந்த மாநில கட்சிகளும் இந்தத் தேசியக் கட்சியாலும் பிரிக்க முடியாது; அப்படி நினைத்தவர்கள் அழிந்து போவார்கள் என்றும் கூறினார்.

69 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்து கொடுத்தது அதிமுக என்ற பேரியக்கம் தான் என்றும் செல்லூர் ராஜூ கூறினார். அதிமுகவில் நடைபெறுவது உரிமைப் பிரச்சினையை பெரிதாக்கி விடுவார்கள் என்றும் கூறினார்.

அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறும் பொதுக் குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு உண்டு என்றும் கூறினார். அதிமுக தொண்டர்கள் ஜாதி, மதங்களை காட்டி பிரிக்க நினைத்தால் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்றும் கூறினார்.

அதிமுக மக்கள் இயக்கம் ஆகும்; அதிமுக தொண்டர்களின் இயக்கம் என்றும் கூறினார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் சிந்தனைகளை திட்டங்களாக செயல்படுத்தியவர் எம்ஜிஆர் என்றும் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top