தரமற்ற முட்டைகளை பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவில் வழங்கப்படவில்லை!-தமிழக அரசு

பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இலவச மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் எம்.ஜி.ராமச்சந்திரன் முதலமைச்சராக இருந்த போது மதிய உணவோடு சேர்த்து முட்டை வழங்கப்பட்டு சத்துணவாக காணப்பட்டன. அவை தற்போது வரை தொடர்ந்து பள்ளிகளில் உள்ள மாணவ மாணவிகளுக்கு இலவச சத்துணவு வழங்கப்படுகின்றன.

முட்டை

இந்த சத்துணவு உணவிலும் கூட  சில சத்துணவு அதிகாரிகள் ஊழல் செய்கின்றனர். என்னவென்றால் அவர்கள் தரமற்ற முட்டைகளை மாணவ-மாணவிகளுக்கு வழங்கியதாக புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சத்துணவு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் சத்துணவில் தரமற்ற முட்டை வழங்கப்படவில்லை என்று தமிழக அரசு தரப்பில் இருந்து அண்மை தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சத்துணவில்  தரமற்ற முட்டைகள் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படவில்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது.

பல நிலைகளில் தரம் உறுதி செய்யப்பட்ட பிறகு முட்டை உள்ளிட்டவை சத்துணவில் வழங்கப்படுகிறது என்றும் கூறியுள்ளது. முட்டை விநியோகஸ்தர்களிடம் இருந்து தரம் உறுதி செய்யப்பட்ட பிறகே முட்டைகள் பெறப்படுகின்றன என்றும் அரசு கூறியுள்ளது. தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு முட்டைகளின் தரம் உறுதி செய்யப்பட்ட பிறகே வேக வைக்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment