ஒரு வேட்பாளருக்கு மூன்று இடத்தில் ஓட்டா? முன்னாள் அமைச்சர் மகளின் வேட்புமனு நிறுத்தி வைப்பு!

நடக்க இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பெண்களுக்கான தேர்தல் என்று கூறலாம். ஏனென்றால் அதிக அளவு இந்த முறை பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் பல முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் மகள்கள் அதிக அளவு வேட்பாளர்களாக ஒரு சில வார்டுகளில் களமிறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்று வருகிறது. இதில் தேர்தல் அதிகாரிகள் ஒருசில வேட்பாளர்களின் மனுவை ஏற்க மறுத்துள்ளனர், ஒருசில வேட்பாளர்களின் மனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தும் வருகின்றனர்.

அந்த வரிசையில் முன்னாள் அமைச்சரின் மகளின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் மகள் புவனேஸ்வரியின் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் தூத்துக்குடி பெருங்குளம் பேரூராட்சி 3வது வார்டில் புவனேஸ்வரி தனது வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார். இன்று வேட்பு மனு பரிசீலனையில் அதிமுக வேட்பாளர் புவனேஸ்வரிக்கு மூன்று இடங்களில் ஓட்டு இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது. இதனால் புவனேஸ்வரியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment