திமுக தலைவர் பதவி.. அக்.7-ம் தேதி முதல்வர் வேட்பு மனு தாக்கல்!!

அக்டோபர் 7-ம் தேதி திமுக தலைவர் தேர்தல் பதவிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்யயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுக்குழுவில் காண்போம், பொதுக்குழுவை காப்போம் என்று திமுக நிர்வாகிகளுக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதனிடையே வருகின்ற 9-ம் தேதி பொதுக்குழு சென்னையில் நடைப்பெறவுள்ளது.

அடி தூள்!! MBBS சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!

இதற்கான வேட்புமனு தாக்கல் என்பது பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்று முடிந்துள்ளது. இதனிடையே ஒரு தாய் மக்களாய், சொந்த பந்தங்களாய் பொதுக்குழுவில் பொதுக்குழுவில் காண்போம் என முதல்வர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில்‘சொன்னதைச் செய்வோம் – செய்வதைச் சொல்வோம்’ என்கிற அரசாட்சியின் அடிப்படை இலக்கணத்தை நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் நமக்கு வழங்கியிருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

நீடிக்கும் பதற்றம்… புதுச்சேரியில் 6-வது நாளாக ஊழியர்கள் போராட்டம்!!!

மேலும், நமக்கு ஊட்டியுள்ள திராவிட உணர்வுடன் தமிழ்நாடு தலைநிமிர்ந்திட, தமிழர்களின் வாழ்வு செழித்திட, செம்மொழித் தமிழ் செம்மாந்து திகழ்ந்திட, கழகமும் கழக அரசும் தொடர்ந்து பாடுபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.