அமைதிக்கான நோபல் பரிசு: மனித உரிமை வழக்கறிஞக்கு அறிவிப்பு..!!

2022-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை பெலாரஸைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைதிக்கான நோபல் பரிசு என்பது மிக முக்கியத்துவமாக கருதப்படுகிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு குறித்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அதன் படி 3 பேருக்கு நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.. அதே சமயம் மனித உரிமை அமைப்புகளுக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெலாரஸைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் உக்ரைன் மனித உரிமைகள் அமைப்பான சிவில் லிபர்ட்டி மற்றும் ரஷிய மனித உரிமை அமைப்பான மெமோரியல் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment