தண்ணீர் கஷ்டத்தில் இருந்து தப்பித்தது சென்னை: அமைச்சர் கே.என்.நேரு தந்த தகவல்

சென்னைக்கு இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு வராது என்று அமைச்சர் கேஎன் நேரு அவர்கள் கூறியிருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வரும் என்பதும் லாரி மூலம் தண்ணீர் சப்ளை செய்து ஓரளவுக்கு குடிநீர் தட்டுப்பாட்டை அரசு தீர்த்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னைக்கு குடிநீர் தரும் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி உள்ளது. இதன் காரணமாக இன்னும் ஒரு ஆண்டுக்கு சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது என்றும் கேஎன் நேரு அவர்கள் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் அக்டோபர் 26 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ளதால் சென்னைக்கு கூடுதல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் எனவே சென்னைக்கு இப்போதைக்கு தண்ணீர் கஷ்டம் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment