சென்னை வரும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில் கட்டணம் இல்லாமல் இலவசமாக கடந்து வருகின்றன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து, சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் நேற்று இரவு முதல் சென்னைக்கு மீண்டும் வந்து கொண்டிருக்கின்றனர். சென்னை திரும்பும் மக்களுக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தென் மாவட்டத்தில் இருந்து அதிக வாகனங்கள் சென்னைக்கு வருகின்றன. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, சென்னையை நோக்கி வரும் வாகனங்கள் மட்டும் பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் இல்லாமல் அனுப்பி வைக்கப்படுகிறது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.