News
திமுகவிலும் சீட் இல்லை: கருணாஸ், தமிமுன் அன்சாரி எடுத்த அதிரடி முடிவு!
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் சிட் இல்லை என்று மறுக்கப்பட்ட காரணத்தினால் அந்த கூட்டணியிலிருந்து வெளியே வந்தவர் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ். இதனை அடுத்து திமுகவுக்கு ஆதரவு என்று அறிவித்துவிட்டு அந்த கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தார். ஆனால் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தவே திமுக தயாராக இல்லை என்றும் கருணாஸ்க்கு சீட் ஈடு கொடுக்க முடியாது என்றும் திமுக தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது
இதனை அடுத்து திமுகவுக்கு கொடுத்த தனது ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக கருணாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார். இதேபோல் அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தமிமுன் அன்சாரியும் திமுகவுக்கு ஆதரவு இல்லை என்று அறிவித்துள்ளார்
இதனையடுத்து இருவரும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அல்லது தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூட்டணியுடன் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக அல்லது திமுக கூட்டணியில் இல்லாத அணியில் கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி போட்டியிட்டால் வெற்றி பெறுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
