மாணவர்களே கவனம்! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது..!!

காஞ்சிபுரத்தில் நாளை பள்ளி வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி ஒரு சில மாவட்டங்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.

கோவில் சொத்துக்களை சுரண்ட அனுமதிக்க முடியாது – ஐகோர்ட் அதிரடி!

இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் பருவமழையின் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. அதே சமயம் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் நாளை வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே செவ்வாய்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக செயல்பட வேண்டும் என
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

பொங்கல் தொகுப்பில் அரசியல் தலையீடு இருக்காது.. அமைச்சர் சக்கரபாணி!

மேலும், பருவமழையின் விடுமுறையை ஈடுக்கட்டும் வகையில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.