அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோர எந்த உரிமையும் இல்லை! சசிகலா-ஈபிஎஸ்,ஓபிஎஸ் வாதம்!

தற்போது நம் தமிழகத்தில் எதிர்கட்சியாக உள்ள அதிமுக கட்சியில் பலவிதமான குழப்பங்கள் நிறைந்து காணப்படுகிறது. ஏனென்றால் அதிமுக பொன்விழா அன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுக கொடியுடன் கூடிய காரில் சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.அதிமுக

அதோடு மட்டுமில்லாமல் அதிமுக கட்சியில் திடீரென்று சசிகலா பொது செயலாளராக உரிமை கூறுகிறார். அதிமுகவின் உறுப்பினர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவை தற்போது நீதிமன்றத்திற்கே சென்றுள்ளது.

நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த ஒரு அடிப்படை உரிமையும் இல்லை என்று ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு வாதிக்கின்றனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உரிமையியல் நீதிமன்றத்தில் வாதம் நிகழ்த்தப்படுகிறது.

இந்த வாதங்கள் முடிவடையாததால் விசாரணையை அக்டோபர் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம். அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றிய பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா தரப்பு வழக்கு தொடுத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment