Connect with us

ரஷ்யாவுடன் உறவு கூடாது: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை !!

Tamil News large 2858358

செய்திகள்

ரஷ்யாவுடன் உறவு கூடாது: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை !!

ரஷ்யாவுடன் உறவு கூடாது: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை !!

உக்ரைன் – ரஷ்யா போர் நடைபெறும் சூழலில் ரஷ்யாவிடம் இருந்து 30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்களை வாங்க இந்தியா  ஆயத்தமாகி வருகிறது.

இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா ஆயத்தமாகி இருப்பதனை  அமெரிக்கா கண்டித்து , ரஷ்யாவுக்கு ஆதரவு அளித்தால் இந்தியாவை வரலாறு பேசும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக போர் தொடுத்து வருகிறது. இதனால் உலகம் முழுவதும் பொருளாதார அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. இதனால் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

ரஷ்யாவில் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளதால் பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதியை படிப்படியாக நிறுத்தி விருகின்றன. இதனால் கச்சா எண்ணெய் விலையினை  குறைவான  விலைக்கு இந்தியா வாங்க  முயற்சி எடுத்து வருகிறது.

இதுகுறித்து வாஷிங்டனில் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது இந்தியாவை தவறான வரலாற்று பக்கத்தில் நிறுத்தும் என்று கூறினார். மேலும், சீனா உட்பட ரஷ்யா உறவு நாடுகளையும் உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறினார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top