Connect with us

மூன்று வார்டுகளுக்கு மறுதேர்தல் அறிவிக்கக்கூடாது!-ஹைகோர்ட் ஆர்டர்;

vote 1280

தமிழகம்

மூன்று வார்டுகளுக்கு மறுதேர்தல் அறிவிக்கக்கூடாது!-ஹைகோர்ட் ஆர்டர்;

மூன்று வார்டுகளுக்கு மறுதேர்தல் அறிவிக்கக்கூடாது!-ஹைகோர்ட் ஆர்டர்;

நாளைய தினம் தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இன்றைய தினமே பாதுகாப்பு பணிகள் தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள காவல்துறையினர் வந்து கொண்டே உள்ளனர்.

நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இருப்பினும் கடம்பூர் பேரூராட்சியில் மட்டும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக மாநில தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில் மூன்று வார்டுக்களுக்கு மறுதேர்தல் அறிவிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. அதன்படி கடம்பூர் பேரூராட்சியில் மூன்று வார்டுக்களுக்கு மறுதேர்தல் அறிவிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

அதன்படி 12 மற்றும் 11வது வார்டுகளின் சுயச்சை வேட்பாளர்கள் தொடர்ந்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கவில்லை என கூறியுள்ளார். மாநில தேர்தல் அதிகாரிகள் ஒரு வாரத்தில் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top