Connect with us

எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து பெட்ரோல், டீசல் கொள்முதல் இல்லை!! தட்டுப்பாடு இருக்குமா?

no helmet no petrol 620x400 1

தமிழகம்

எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து பெட்ரோல், டீசல் கொள்முதல் இல்லை!! தட்டுப்பாடு இருக்குமா?

கடந்த சில மாதங்களாக உச்சத்தில் இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை 10 நாட்களுக்கு முன்பு வெகுவாக குறைந்தது. அதுவும் தமிழகத்தில் 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல் 8 ரூபாய் குறைந்து தற்போது நூற்றி மூன்று ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திடீரென்று பெட்ரோல் விற்பனையாளர்கள் அதிர்ச்சிகரமான அறிவிப்பு ஒன்றினை கூறியுள்ளனர். அதன்படி எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து நாளை ஒருநாள் பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்யப் படாது என்று அறிவித்துள்ளனர்.

கலால் வரி குறைப்பால் சில்லறை விற்பனை விலையை உடனே மாற்றியதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பெட்ரோல் விற்பனையாளர்கள் கூறியுள்ளனர். மேலும் மக்களுக்கு பாதிப்பின்றி வழக்கமான முறையில் பெட்ரோல், டீசல் விற்பனை தொடர்ந்து நடைபெறும் என்றும் விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.

குறைந்தபட்சம் ரூபாய் 2 லட்சம் முதல் 10 லட்சம் வரை விற்பனையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top