Connect with us

எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆளுநரின் அணுகுமுறை சரியானது அல்ல!!: விளக்கமளித்தார் ஸ்டாலின்

state assembly meeting

தமிழகம்

எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆளுநரின் அணுகுமுறை சரியானது அல்ல!!: விளக்கமளித்தார் ஸ்டாலின்

எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆளுநரின் அணுகுமுறை சரியானது அல்ல!!: விளக்கமளித்தார் ஸ்டாலின்

இன்றைய தினம் தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது பேசிய அவர் சித்திரை திருநாள் அன்று ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு பற்றி கூறினார். அதன்படி ஆளுநர் ரவியுடன் எந்த ஒரு முரண்பாடும் இல்லை என்றும் சுமுகமான உறவு உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

தனிப்பட்டமுறையில் ஆளுநர் ரவியுடன் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் ஸ்டாலின் கூறினார். ஆளுநர் தேனீர் விருந்து புறக்கணிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விதி எண் 110-ன் கீழ் சட்டப்பேரவையில் விளக்கமளித்தார்.

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்காதன் காரணமாகவே தேநீர் விருந்தை புறக்கணித்ததாக என்றும் முதலமைச்சர் கூறினார். பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

ஆளுநர் ரவி அனுப்பி வைக்காமல் இருப்பதே சரியான அணுகுமுறை அல்ல என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார். நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க ஆளுநர் முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் தகவல் வந்துள்ளது.

தேவைப்பட்டால் அனைத்து கட்சி சட்ட மன்ற தலைவர்கள் கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாகவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top