பொங்கல் தொகுப்பில் அரசியல் தலையீடு இருக்காது.. அமைச்சர் சக்கரபாணி!

தமிழகத்தில் 2023-ம் பொங்கல் தினத்தை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பச்சரிசு, சர்க்கரை, கரும்பு மற்றும் ரூ.1000 பணம் வழங்கும் பணி மும்முரமாக நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரை வாடிப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பொங்கல் தொகுப்பிற்கு டோக்கன்கள் வீடு வீடாக சென்று வழங்க அரசு உத்தரவிட்டு இருப்பதாக கூறினார்.

ஞாயிற்றுகிழமை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

அதே போல் டோக்கன்கள் வழங்குவதில் எங்கேயும் அரசியல் இருக்காது என அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார். இதனையடுத்து கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் விவசாயிகளிடம் இருந்து ரூ.30 ரூபாய்க்கு கரும்பு கொள்முதல் செய்யப்பட்டதாகவும், திமுக ஆட்சியில் ரூ.33 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கரும்பு அதிகமாக உள்ளதாகவும், குறிப்பாக மதுரை அடுத்த மேலூரில் அதிகமாக விளைவதாக தெரிவித்தார். இங்குள்ள கரும்பை நீலகிரி மாவட்டத்திற்கு ஏற்றுமதி செய்வதாக தெரிவித்தார்.

3 நாட்களில் 44 நீதிபதிகள்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அதிரடி!

அம்மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகள் இருப்பதால் ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய பகுதிகளுக்கு 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.