அடுத்த 3 நாட்களுக்கு பெட்ரோல் இல்லை!! கைவிரித்த இலங்கை…

இலங்கையில் பெட்ரோல் டீசல் கையிருப்பு தீர்ந்ததால் அங்கு பொருளாதார நிலை மிகவும் மோசமாகியுள்ளது. பெட்ரோல், டீசலுக்காக மக்கள் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகளில் காத்துக்கிடக்கும் நிலை உள்ளது.

பெட்ரோல் டீசல் கையிருப்பு இல்லாததால் இலங்கையின் முக்கிய நகரமான கொழும்பு மற்றும் முக்கிய நகரங்களில் மக்கள் நீண்ட வரிசையில் பொதுமக்கள்  காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டால் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா சார்பில் 4 லட்சம் டன் டீசல் அனுப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அது எப்போது கிடைக்கும் என்ற தெரியாத நிலையில் அங்கு பெரும்பாலான பெட்ரோல் டீசல் நிலையங்களில் பெட்ரோல் இல்லை என வாசகத்துடன் பதாகைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.

அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில் வாகனஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியா அனுப்பிய டீசல் இலங்கைக்கு வந்து சேர ஓரிரு நாட்கள் ஆகும் என்பதால் அடுத்த 3 நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், எரிபொருள் தட்டுப்பாட்டால் அங்கு பொருளாதாரம் பாதாள நிலைக்கு செல்லும் அபாய நிலை  ஏற்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment