News
கொரோனாவால் ஒரேயடியாக படுத்துவிட்ட ஆன்லைன் உணவு பிசினஸ்

கொரோனா வைரஸ் பீதி காரணமாக கிட்டத்தட்ட அனைவருமே வீட்டில் முடங்கிக் கிடப்பதால் வீட்டில் ஓய்வு நேரத்தில் அனைவரும் சமைக்கத் தொடங்கி விட்டனர். சமையலே தெரியாதவர்கள், சமையலறை பக்கம் செல்லாதவர்கள் கூட தற்போது சமைத்து வருவதாக தெரிகிறது
பிஸியான ஷெட்யூல் காரணமாகவே இது வரை ஆன்லைனில் உணவு வாங்கி சாப்பிட்டு வந்த பொதுமக்கள் பலர் தற்போது முழு நேர ஓய்வில் இருப்பதால் விதவிதமான உணவுகளை வீட்டிலேயே சமைத்துச் சாப்பிட்டு வருகின்றனர். இதனால் ஆன்லைனில் உணவு விநியோகம் செய்யும் டெலிவரிபாய்களுக்கு சுத்தமாக ஆர்டர் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதேபோல் ஆன்லைன் உணவு நிறுவனங்கள் வியாபாரம் ஒரேடியாக படுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஒரு ஆர்டர் கூட கிடைக்காத ஊழியர்களும் இதில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது
