தடுப்பூசியை ஒருத்தருக்கும் போடக்கூடாது! பெண் வி.ஏ.ஓ.வை ஆபாச வார்த்தையால் திட்டிய இளைஞர் கைது!!

நூறு கோடிக்கும் அதிகமான தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை என்ற உலக சாதனையை இந்தியா புரிந்து உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதற்கு பல தடுப்பூசி முகாம்களில் அரசு ஊழியர்கள், மருத்துவர்கள் என பலரும் அயராது உழைத்துள்ளனர்.

தடுப்பூசி

அதோடு மட்டுமில்லாமல் பாரத பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பு தடுப்பூசிகள் குறைவாக செலுத்தியுள்ள மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு நேரில் சென்று வீடு வீடாக தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தி இருந்தார்.

அதன் வாயிலாக இன்றைய தினம் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்த கிராமத்திற்கு மருத்துவர்கள் சென்றிருந்தனர். ஆனால் அங்கு தடுப்பூசி போடுவதை இளைஞர் ஒருவர் தடுத்துள்ளார். அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அதன்படி தடுப்பூசி போடுவதை தடுத்த இளைஞர் முகுந்தன் பெண் வி.ஏ.ஓ.வை ஆபாசமாக பேசியுள்ளார். இந்த முகுந்தன் 21 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஆவார். இந்தநிலையில் தடுப்பூசி போட கிராமத்துக்கு வந்த மருத்துவர்களையும் பணி செய்யவிடாமல் இளைஞர் முகுந்தன் தடுத்துள்ளார். இதனால் தடுப்பூசி போடுவதை தடுத்த இளைஞர் முகுந்தனை போலீசார் கைது செய்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment