நீட் தேர்வு தகுதி பெற்றவர்கள்: முதல் 20 இடத்தில் தமிழகத்தில் உள்ள யாருமே இல்லை!

நீட்

மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு நீட் தேர்வுக்கான தேர்ச்சி சதவீதம் வெளியாகியுள்ளது. அது இந்தியாவில் மொத்தம் 56.34% பேர் நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ளனர் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் மாணவிகளின் ஆதிக்கமே அதிகமாக காணப்படுகிறது.நீட்

மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வை 2021 ,15 லட்சத்து 44 ஆயிரத்து 275 பேர் மாணவர்கள் எழுதியுள்ளனர். நாடு முழுவதும் 87074 பேர் தகுதி பெற்றுள்ளனர். தகுதி பெற்றவர்களின் சதவீதத்தில் பார்த்தால் 56.34 சதவீதமாக காணப்படுகிறது.

2020இல் நீட் தேர்வு எழுதியவர்களின் 57.44 சதவீதம் பேர் தகுதி பெற்றனர். இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களின் சதவீதம் சற்று குறைவாக உள்ளது. ஆனால் கடந்த ஆண்டை விட 2021 தேர்வு எழுதியவர்கள் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதும் குறிப்பிடதக்கது.

2021 நீட்தேர்வில் ,3 லட்சத்து 70 ஆயிரத்து 260 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். 4 லட்சத்து 94 ஆயிரத்து 806 மாணவிகள் தகுதி பெற்றனர். 8 மூன்றாம் பாலின மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். இதனடிப்படையில் பார்த்தால் மாணவிகள் மாணவர்களை விட அதிகமாக தகுதி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

நீட்தெலுங்கானாவில் மிர்நெல் குட்டேரி ,டெல்லியின் தன்மே குப்தா  மகாராஷ்டிராவின் கார்த்திகா ஜி நாயர் ஆகியோர் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளனர். மூன்று மாணவர்களின் டிரேக்கிங் முறைப்படி முதலிடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

தமிழக அளவில் நாமக்கல் மாணவி கீதாஞ்சலி முதலிடத்தை பிடித்துள்ளார். நாமக்கல்லைச் சேர்ந்த பிரவீன் இரண்டாம் இடமும், தஞ்சாவூரை சேர்ந்த அரவிந்த் மூன்றாமிடமும் பெற்றனர்.

தேசிய அளவில் கீதாஞ்சலி இருபத்தி மூன்றாவது இடமும், பிரவீன் 30 ஆவது இடமும், அரவிந்த் 43 ஆவது இடத்திலும் உள்ளனர். 20 பேர் கொண்ட மாணவர்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிக மதிப்பெண் எடுத்த மாணவிகள் பட்டியலில் கீதாஞ்சலிக்கு 6வது இடமும்,ஹர்ஷிதா 17வது இடமும் பிடித்தனர். மாற்றுத்திறனாளி மாணவிகள் முதல் 10 பேரில் தமிழகத்தின் மேட்லின் ஜெமிமாவுக்கு ஏழாவது இடமும் கிடைத்துள்ளது.

5893 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதியதில் 2683 பேர் தகுதி பெற்றுள்ளனர். முறைகேடுகளில் ஈடுபட்ட 15 பேரின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print