வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி… கரூரில் யாருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை!: செந்தில் பாலாஜி

தென்னாப்பிரிக்க நாட்டில் தோன்றி இன்று இந்தியாவெங்கும் அதிகமாக காணப்படுகிறது ஒமைக்ரான் வைரஸ். நம் தமிழகத்திலும் இந்த உண்மை ஒமைக்ரான் வைரஸ் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இதனால் இந்திய அரசாங்கம் நேற்றையதினம் ஆபத்திற்குரிய நாடுகளின் பட்டியலை வெளியிட்டிருந்தது.

அந்த நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள் விமான நிலையங்களிலேயே கடும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் கூறியிருந்தது. இந்த நிலையில் ஒமைக்ரான்  பற்றி அவ்வப்போது வதந்திகளும் பரவி வருகிறது. வதந்தி பரப்புவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் நம் தமிழகத்தின் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஒமைக்ரான் பற்றி சில முக்கிய அறிவிப்புகளை கூறியுள்ளார். அதன்படி கரூரில் இதுவரை யாருக்கும் ஒமைக்ரான்  உறுதியாகவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். கரூரில் இதுவரை 93 சதவீதம் பேர் முதல் டோஸ் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

கரூரில் 1482 படுக்கை தயார் நிலையில் உள்ளது என்றும் அவர் கூறினார். இந்த 1482 படுக்கைகளில் 936 படுக்கைகள் ஆக்சிசன் வசதியுடன் கூடியதாக உள்ளது என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

இதனால் கரூரில் ஒமைக்ரான் பாதிப்பு இருக்கும் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மின்சாரத் துறை அமைச்சரின் தகவல் வெளியாகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment