யாராலும் உங்களை தடுக்க முடியாது… யாரை சொல்கிறார் அர்ச்சனா?

38c722f6a4d9595e857bb0f46469e7e1

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இதில் ஆரி அர்ஜுனன் வின்னராகவும், பாலாஜி ரன்னராகவும் தேர்வு செய்யப்பட்டார். வாக்கெடுப்பின் அடிப்படையில் 3-வது இடத்தை ரியோவும், 4-வது இடத்தை ரம்யாவும் பிடித்தனர். இறுதி நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

அர்ச்சனா, சம்யுக்தா ஆகியோர் நடனம் ஆட வேல்முருகன், ஆஜீத், சுச்சி ஆகியோர் பாடல் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர். கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கழித்து போட்டியாளர்கள் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்க ஆரம்பித்து இருக்கின்றனர். அந்த வகையில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்று முக்கிய போட்டியாளராக மாறிய அர்ச்சனா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து மெசேஜ் சொல்லி இருக்கிறார்.

அதில் ”உங்களை திணறடிக்கவும், உங்கள் சிறகுகளை முடக்கவும் முயற்சி செய்வார்கள். ஆனால் நீங்கள் உயர்ந்த வல்லமை கொண்டவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எதுவும் அதை தடுக்க முடியாது,” என தெரிவித்து இருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.